மாவட்டத்தில் கொரோனாவுக்கு 34 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 39 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 34 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேர், ஆத்தூரில் 4 பேர், நங்கவள்ளி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், வாழப்பாடியில் 2 பேர், மேட்டூர், நரசிங்கபுரம், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 3 பேர், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 34 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story