ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் மும்முரம்


ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 30 Dec 2020 7:24 PM IST (Updated: 30 Dec 2020 7:24 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமானபணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்டிடம் ரூ.455 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் தடைபட்டன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணிகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டிடமும், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரி நிர்வாக அலுவலகம் மற்றும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றது. கொரோனா காலத்தில் கட்டுமான பணிகள் தடைபட்டாலும் தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

இந்த கட்டிட பணிகளை அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் அதிகாரிகள் கட்டுமானப்பணிகளை சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். எதிர்பார்த்ததை விட பணிகள் விரைவாக நடைபெறுவதால் வரும் 2021-22 கல்வியாண்டில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது வெளி மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story