மனைவி எரித்துக்கொலை? மதுரை போலீஸ்காரர் மீது புகார்


மனைவி எரித்துக்கொலை? மதுரை போலீஸ்காரர் மீது புகார்
x
தினத்தந்தி 30 Dec 2020 8:23 PM IST (Updated: 30 Dec 2020 8:23 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை எரித்துக் கொன்றதாக மதுரை போலீஸ்காரர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு்ள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழ பசலையை சேர்ந்தவர் மூர்த்தி. போலீஸ்காரரான இவர் மதுரை பட்டாலியனில் பணிபுரிகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த கவிதாவும் (வயது 24) கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கவிதா, அவரது வீட்டில் தீப்பற்றிய நிலையில் காயமடைந்து கிடந்தார்.

மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் காரணம் எனவும் கவிதாவின் தாயார் ராக்கு மானாமதுரை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், போலீஸ்காரர் மூர்த்தி, அவரது தாயார் இந்திரா, மூர்த்தியின் சகோதரி சவுந்தர்யா ஆகியோர் கவிதாவை கொடுமைப்படுத்தி, மண்எண்ெணயை ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறியுள்ளார்.

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது கவிதா ஒரு தரப்பினருக்கும், மூர்த்தி மற்றொரு தரப்பினருக்கும் ஆதரவாக இருந்ததாகவும், அதில் கவிதா தரப்பு நபர் வெற்றி பெற்றதாகவும், அதன்பின்பு கணவன், மனைவி மற்றும் மாமியார் இடைேய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்்ததாகவும் கூறப்படுகிறது.

கவிதா சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கவிதாவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் இது தொடர்பாக உதவி கலெக்டர் முத்துகழுவனும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story