ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு


ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு
x
தினத்தந்தி 31 Dec 2020 6:47 AM IST (Updated: 31 Dec 2020 6:47 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நேற்று தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நேற்று தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில், ஒன்றிய அலுவலரிடம் மனு அளித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், தாந்தோணி ஒன்றிய செயலாளர் ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட தலைவர் பாபு தலைமையில், பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஒன்றிய அலுவலரிடம் மனு அளித்தனர். இதேபோல் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திலும் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.

Next Story