போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் ஆற்றங்கரையில் உடல் கருகிய நிலையில் மெக்கானிக் பிணம்
போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் ஆடுதுறை அருகே ஆற்றங்கரையில் உடல் எரிந்த நிலையில் மெக்கானிக் பிணமாக கிடந்தார். அவர் எரித்துக்கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே சாத்தனூர் கீழ பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கார்த்திக் (வயது30). இவர் ஆடுதுறை பகுதியில் கார் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் இதே பகுதியைச்சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு உதவும் விதத்தில் பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறி கார்த்திக் உள்ளிட்ட சிலர் மீது திருநீலக்குடி போலீஸ் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர்.
பிணமாக கிடந்தார்
இந்த புகாரின் அடிப்படையில் திருநீலக்குடி போலீசார் நேற்று விசாரணைக்கு கார்த்தியை அழைத்தனர். இந்தநிலையில் கார்த்திக் சாத்தனூர் மஞ்சளாற்றாங்கரை சின்னாற்று பாலத்தின் அருகே உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கார்த்திக் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். கார்த்திக் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story