திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சிவன் அருள் தகவல்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர்,
கல்லூரியில் படிக்கும் மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், சுய தொழில் புரிவதற்கான சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், வேலூர் என்ற முகவரிக்கு வருகிற 8-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story