சோளிங்கரில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
சோளிங்கரில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
சிப்காட்(ராணிப்பேட்டை),
வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் அ.ம. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், முனிகிருஷ்ணன், பாஸ்கரன், ஏழுமலை, கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சட்ட பாதுகாப்பு குழு துணைச் செயலாளர் சக்கரவர்த்தி வரவேற்றார். வன்னியர் சங்க, பா.ம.க. நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியிடம் மனு கொடுத்தனர்.
போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் வடிவேல், செல்வகுமார், பிச்சாண்டி, பாபு, சிதம்பரம் மற்றும் திவ்யா, இந்துமதி, ஜானவி, பாலமுருகன், நிதின் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
அதேபோல் காவேரிப்பாக்கத்தில் நடந்த போராட்டத்துக்கு காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட அமைப்புச் செயலாளர் கார்த்திக் ராஜா ஆகியோர் பங்கேற்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். மனு கொடுக்கும் போராட்டத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story