நாமக்கல் அருகே, மினி ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - 28 பேர் காயம்


நாமக்கல் அருகே, மினி ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - 28 பேர் காயம்
x
தினத்தந்தி 31 Dec 2020 8:30 PM IST (Updated: 31 Dec 2020 8:30 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே மினி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அன்று இரவு நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மினி ஆட்டோக்கள், வேன்களில் முதல்-அமைச்சர் பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு சென்றனர். புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைப்பட்டியில் இருந்தும் 20-க்கும் மேற்பட்டோர் மினி ஆட்டோ ஒன்றில் நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றனர்.

இதனிடையே கூட்டம் முடிந்த பிறகு மினி ஆட்டோவில் அனைவரும் வீடு திரும்பி உள்ளனர். நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகர் என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த கார் மினி ஆட்டோவின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் ஆட்டோ சாலையிலேயே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பெண்கள் உள்பட 29 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் நாமக்கல் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அதில் திருமலைப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த பழனியம்மாள் (வயது 55) நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ‌விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story