20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
நாமக்கல்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோளின்படி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதுமுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. அதேபோல் நாமக்கல் மாவட்டம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மோகன்ராஜ், சேகர் மற்றும் ராசிபுரம் நகர செயலாளர்கள் மணிகண்டன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரத், பூபதி, செந்தில்குமார் வரவேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணியைச் சேர்ந்த செல்வி, கலைவாணி, பாரதி, பவித்ரா, பிரியதர்ஷினி, தார்னிகா, யோகப் பிரியா, சவுமியா, மோனிஷா, பவித்ரா, ராதா, தேவி, மற்றும் ரவிச்சந்திரன் கணேச பாண்டியன், பூக்கடை மாது, பன்னீர் உள்பட வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மோகனூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர் நிகழ்ச்சிக்கு மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளரும், மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவருமான பிரதாப் தலைமை தாங்கினார். மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் பொன்.ரமேஷ் கலந்து கொண்டார். இதில் முன்னாள் வன்னியர் சங்க செயலாளர் தம்பி என்கிற ராதாகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட தொண்டரணி செயலாளர் கோபிநாத், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் சதாசிவம், வேலூர் பேரூர் செயலாளர் ஜெய்கணேஷ், ராசப்பன், ராகுல், வினோத் உள்பட ஒன்றிய, கிளை, சார்பு மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மோகனூர் மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.
பள்ளிபாளையம் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று காலை பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் தலைமையில், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, துணைச் செயலாளர் மூர்த்தி முன்னிலையில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்னியர் சங்க தலைவர் கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட துணைத்தலைவர் செங்கோடன், மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் சேட்டு, ஒன்றிய தலைவர் ஜெயமுருகன், நகர தலைவர் ராஜபாண்டியன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சிவலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வடிவேல், குமராபாளையம் நகர செயலாளர் சோமு விஜயகுமார், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய தலைவர் கண்ணன், மாவட்ட உழவர் பேரியக்கம் தலைவர் கோவிந்தன், மாவட்ட சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர் கோவிந்தன், ஒன்றிய பொருளாளர் செல்வி, மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, செயற்குழு உறுப்பினர் முருகேசன், அலெக்ஸ் குணசேகரன். ரவிக்குமார் உள்பட வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 20 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக மனு கொடுக்கப்பட்டது.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் வன்னியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சம்பத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாமக்கல் மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிச்சாமி, வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், ரத்தினம், வடிவேல், குட்டி என்ற பிரேம்குமார், சேகர், பிரபு மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரிடம் கோரிக்கைகளை முன்னிறுத்தி கையொப்பமிட்ட மனுவை கொடுத்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ், மாநில துணைத் தலைவர் சுதாகர் தலைமை வகித்தனர் இதில் மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் பொன் தனபால், மாவட்டத் துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் பாம்பு செந்தில், திருச்செங்கோடு நகர வடக்கு செயலாளர் சிவக்குமார், தெற்கு நகர செயலாளர் சுரேஷ், தலைமை கழக பேச்சாளர் லோகநாதன், மாவட்ட இளைஞர் சங்க துணைச் செயலாளர் விமல், துணைத் தலைவர் மோகன், மாவட்ட பசுமைத்தாயகம் செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story