ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பெருமிதம்
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கியவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம், ராமுதேவன்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சாத்தூர் தொகுதி பொறுப்பாளர், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி முன்னிலை வகித்தார். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல்ராஜ் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 35 இடங்களில் மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் திறக்கப்படும். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல், சளி, உள்ளிட்ட நோய்களுக்கு ஊசி, மருந்து வழங்கப்படும். மினி கிளினிக் பெயர் மட்டும்தான் ஆனால் பெரிய அளவிலான கிளினிக் ஆகும். பொது மக்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் மாலதி நல்லதம்பி, கிழக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் கே.வி.கே.ராஜு, சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சியார்பட்டி மாரியப்பன், சாத்தூர் நகர செயலாளர் இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜாசிங், பரமேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி ஒன்றியம், வெள்ளையாபுரம் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் படிப்பு கனவை நனவாக்கியுள்ளார். என்றார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, மாவட்ட பொருளாளர் குருசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பிரபாத் வர்மன், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், பூமிநாதன், நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் பால்சாமி, சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் சித்திக், முன்னாள் ஒன்றிய செயலாளர் போத்திராஜ், திருச்சுழி ஒன்றிய துணைச் செயலாளர் முத்துவேல், நரிக்குடி ஒன்றிய பேரவை செயலாளர் தியாகராஜன், நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் தச்சனேந்தல் சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆவியூர் ரமேஷ், பந்தனேந்தல் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி, மந்திரி ஓடை சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story