விராலிமலையில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி ஸ்ரீரங்கம், மணப்பாறை, காவல்காரன்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு விராலிமலை வழியாக திருச்சிக்கு சென்றார்.
விராலிமலை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி ஸ்ரீரங்கம், மணப்பாறை, காவல்காரன்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு விராலிமலை வழியாக திருச்சிக்கு சென்றார். அப்போது விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், அ.தி.மு.க. வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது திறந்த வேனில் நின்று முதல்-அமைச்சர் பேசியதாவது:-
விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர் போன ஊராகும். புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டு வீரர்கள் விளையாடும் மைதானமாக உள்ளது. சென்ற முறை இங்கு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை நானே நேரடியாக வந்து தொடங்கி வைத்து பார்வையிட்டேன். அதுபோலவே இந்த முறையும் விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. (அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் இந்த முறையும் நீங்களே வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வேண்டும் என கூறினர்). புதுக்கோட்டை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த பகுதி, ஏழை மக்கள் வாழ்கின்ற இந்த பகுதியிலே இன்றைக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் வருகிற 4-ந்் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும் என்றும் கூறினார்.

Related Tags :
Next Story