நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு
நெல்லை மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாநில நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு புனரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.79 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் மாநகராட்சி பிரதான அலுவலகம் எதிரில் பிரமாண்டமான வர்த்தக மையம் கட்டப்பட்டு வருகின்றன. பழைய பேட்டையில் லாரிகள் நிறுத்திவைக்க பன்னாட்டு முனையம் அமைக்க பட்டு உள்ளது.
மேலும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகளும், பாளையங்கோட்டை பஸ் நிலையம் சீரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது. அதேபோல் நேரு சிறுவர் பூங்காவிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுபோல் பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் நடந்து வருகின்றன.
நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு
இந்த பணிகளை ஆய்வு செய்ய மாநில நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் நேற்று நெல்லை வந்தார். அவர் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கான முதன்மை ஒருங்கிணைப்பாளர் நாராயணன் நாயர், தச்சை மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story