ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கடலூர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கடலூர் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்,
2020-ம் ஆண்டு முடிந்து நேற்று இரவு 12 மணிக்கு 2021 -ம் ஆண்டு பிறந்தது. இந்த ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இருப்பினும் வழிபாட்டுத் தலங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பிரார்த்தனையில் ஈடுபடலாம் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று புத்தாண்டு பிறப்பு கொண்டாடப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற வில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றது.
சிறப்பு பிரார்த்தனை
அந்த வகையில் கடலூர் சாமி பிள்ளை நகரில் உள்ள புனித இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நேற்று இரவு 11.45 மணி முதல் 12.45 மணி வரை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதை பங்கு தந்தை பெரியநாயக சாமி நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். முன்னதாக 2020-ம் ஆண்டுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
ஆற்காடு லுத்தரன் திருச்சபை
இதேபோல் கடலூர் பாரதிசாலையில் உள்ள ஆற்காடு லுத்தரன் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனையை முன்னாள் பேராயர் ராஜா சாக்ரடீஸ், சபை போதகர் ஜெயகரன் கிறிஸ்டோபர் ஆகியோர் நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கொரோனோ நோய் தீர வலியுறுத்தியும் சிறப்பு வழிபாடு நடந்தது. புனித கார்மேல் அன்னை ஆலயம், தூய எபிபெனி ஆலயம், கம்மியம்பேட்டை புனித வளனார் உள்ளிட்ட தேவாலயங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணி, 6.30 மணி, காலை 8 மணிக்கும் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

Related Tags :
Next Story