மாவட்ட செய்திகள்

கடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு + "||" + Soil erosion due to sea rage in Cuddalore lowland

கடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு

கடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு
கடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர்,

கடலூரில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் தாழங்குடா பகுதியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கும் மேல் எழுந்து, ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் இருந்து சுமார் 30 அடி தூரத்துக்கு அலைகள் கரையை தாண்டி வந்தன. மேலும் கடல் சீற்றத்தால் தாழங்குடாவில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.


மண் அரிப்பு

இதற்கிடையே கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகளை டிராக்டர்கள் மூலம் இழுத்து சென்று மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். இதேபோல் தேவனாம்பட்டினம் பகுதியிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் சில்வர் பீச்சுக்கு சென்ற பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் அடித்து கொன்றனரா?
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து கொன்று விட்டதாக கூறி கோட்டைப்பட்டினத்தில் மறியல் ேபாராட்டம் நடைபெற்றது. இதனால், மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.
2. பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சிற்றத்துடன் காண்படுவதால், நேற்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
3. குமரியில் கடல் சீற்றத்தால் 2 வீடுகள் சேதம்
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் 2 வீடுகள் சேதமடைந்தது.
4. தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம்: டேனிஷ்கோட்டையை நெருங்கி வரும் கடல் அரிப்பு
தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றத்தால் டேனிஷ்கோட்டையை கடல் அரிப்பு நெருங்கி வருகிறது. துறைமுக தடுப்பு சுவர் பாதிப்பு அடைந்து உள்ளது.
5. பெரியதாழையில் கடல் அரிப்பு: தூண்டில் வளைவை நீட்டிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை
பெரியதாழையில் கடல் அரிப்பு ஏற்பட்டது. எனவே அங்கு தூண்டில் வளைவை நீட்டிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.