கிருஷ்ணகிரியில் வியாபாரியிடம் ரூ.95.44 லட்சம் கொள்ளை: பாதிரியார் உள்பட 7 பேருக்கு வலைவீச்சு
கிருஷ்ணகிரியில் வியாபாரியிடம் ரூ.95.44 லட்சம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி,
கோவை செட்டி வீதி சாவித்திரி நகரை சேர்ந்தவர் அஸ்வின்குமார் (வயது 29). வியாபாரி. இவரிடம் குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் என சிலர் போனில் பேசினார்கள். மேலும் அவரை கிருஷ்ணகிரிக்கு வருமாறு கூறினார்கள்.
அதை நம்பி அஸ்வின் குமார் ரூ.95 லட்சத்து 44 ஆயிரத்துடன் கிருஷ்ணகிரிக்கு வந்தார். இந்த நிலையில் அஸ்வினின் கவனத்தை திசை திருப்பிய மர்ம கும்பல் அவர் வைத்திருந்த பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக அஸ்வின்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் செட்டியார், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சி.எஸ்.ஐ. தேவாலய பாதிரியார் மார்ட்டின், கார் டிரைவர் மற்றொரு ராஜசேகர் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story