குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; பக்தர்கள் கூட்டமாக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு


குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; பக்தர்கள் கூட்டமாக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jan 2021 11:56 PM GMT (Updated: 1 Jan 2021 11:56 PM GMT)

ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் குன்றத்தூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோவிலில் கொரோனா விதிமுறைகளின்படி நள்ளிரவு முதல் கோவில் நடை திறக்காமல் நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 6 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

குன்றத்தூர் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர்.

கோவிலுக்கு உள்ளே செல்ல நுழைவுவாயிலில் பக்தர்கள் கூட்டமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு நெருக்கமாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இதனை சரி செய்ய போலீசார் அதிக அளவில் பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story