திண்டிவனத்தில், தங்கும் விடுதியில் வாலிபர் தற்கொலை - தன்னை பிடிக்கவில்லை என்று பெண் கூறியதால் விபரீத முடிவு
திண்டிவனத்தில் தங்கும் விடுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம்,
வானூர் வட்டம் டி.பரங்கனி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருளரசன் (வயது 28). இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது. இதையறிந்த அவரது தயாா, ரம்மி விளையாட்டை விட்டுவிடுமாறு கூறி திட்டி வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவர்களது பெற்றோர், பெண் பார்த்து வந்தனர். அதில் ஒரு பெண், அருளரசனை பிடிக்கவில்லை என கூறியுள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் அருளரசன், திண்டிவனத்துக்கு சென்று வருவதாக வீ்ட்டில் கூறி வந்தார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, திண்டிவனத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், அறை எடுத்து தங்கிய அருளரசன் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது தம்பி சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story