சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று; 2 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியானார்கள்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 38 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16 பேர், அயோத்திப்பட்டணம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, வாழப்பாடி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 4 பேர், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார். சேலத்தை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டி கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார்.
Related Tags :
Next Story