திருச்செங்கோடு அருகே தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தற்கொலை
திருச்செங்கோடு அருகே தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு அருகே மோளியப்பள்ளி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் அனுசுயா (வயது 18). பரமத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ.. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்ததை அடுத்து அனுசுயா சோகமாக இருந்து வந்துள்ளார். இவரது தாயும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். அப்போது நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அனுசுயா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். அந்த மாணவியை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அனுசுயாவுக்கு முருகானந்தம், பாரிக்குமார், அருண்குமார் என 3 அண்ணன்கள் உள்ளனர்.
தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Related Tags :
Next Story