வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கருப்பு துணியை தலையில் கட்டி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கருப்பு துணியை தலையில் கட்டி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2021 9:12 PM IST (Updated: 2 Jan 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கருப்பு துணியை தலையில் கட்டி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி,

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரித்தும் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த முல்லக்குடியில் பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விவசாய சங்கத்தினர் கருப்பு துணியை தலையில் கட்டி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜீவகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் ஒன்றிய விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முருகேசன், உதயகுமார், சேகர், காசிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Next Story