புத்தாண்டு கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவியை கொன்றதாக காதலன், இளம்பெண் கைது - பரபரப்பு தகவல்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதாக அவரது காதலன் மற்றும் இளம்பெண் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது
மும்பை,
மும்பை கார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் புத்தாண்டு தினத்தன்று நடந்த கொண்டாட்டத்திற்காக ஜான்வி (வயது19) என்ற இளம்பெண் வந்தார். கொண்டாட்டத்தின்போது நடந்த தகராறில் ஜான்வி தடுமாறி மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜான்வியின் 22 வயது காதலரும் புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டது தெரியவந்தது.
ஜான்வி அங்கு வந்த போது அவரது காதலர், 19 வயது இளம்பெண்ணுடன் நெருக்கமாக பேசி கொண்டிருந்ததை கண்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்வி காதலர் மற்றும் இளம்பெண்ணுடன் சண்டை போட்டு உள்ளார்.
இந்த நிலையில் ஜான்வி கட்டிடத்தின் தரை தளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் போலீசார் தோண்டி தோண்டி நடத்திய தீவிர விசாரணையில், ஜான்வியை கொலை செய்ததாக அவரது காதலன் மற்றும் இளம்பெண்ணை கைது செய்தனர்.
கொலையான ஜான்வி கல்லூரி மாணவி என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கல்லூரி மாணவியை கொலை செய்ததாக அவரது காதலன் மற்றும் இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story