காதல் திருமணத்திற்கு தாய் மறுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை லாலாபேட்டை அருகே சோகம்
லாலாபேட்டை அருகே காதல் திருமணத்திற்கு தாய் மறுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாலாபேட்டை,
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களது மகள் அருள்ஜோதி (வயது 19). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதால், தனது தாயாருடன் அருள்ஜோதி வசித்து வந்தார்.
இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை அருள்ஜோதி காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் தனது தாயாரிடம், தனது காதலனை உடனடியாக திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளார். அதற்கு லிங்கம்மாள், திருமணம் இப்போது வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தாயுக்கும், மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருள்ஜோதி மனமுடைந்து காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்ெகாலை
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தோட்ட வேலைக்கு சென்று விட்டு லிங்கம்மாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதையடுத்து அருள்ஜோதியை, லிங்கம்மாள் பலமுறை கூப்பிட்டும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லிங்கம்மாள், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அருள்ஜோதி தூக்கில் பிணமாக தொங்கி னார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அருள்ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story