மோட்டார்சைக்கிள்-மொபட் மோதல்: விவசாயி உள்பட 2 பேர் பலி
ஊத்தங்கரை அருகே மோட்டார்சைக்கிள்-மொபட் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாலமரத்துப்பட்டி பக்கமுள்ள குருகப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 25). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை புலியூர்-ஊத்தங்கரை சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கெரிகேப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (40) என்பவர் மொபட்டில் அந்த வழியாக வந்தார். சாலமரத்துப்பட்டி அருகே மோட்டார்சைக்கிளும், மொபட்டும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இளங்கோவன், செல்வம் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story