மாவட்டத்தில், புத்தாண்டையொட்டி 2 நாட்களில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.32 லட்சம் அதிகம்
நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.7 கோடியே 6 லட்சத்துக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.32 லட்சம் அதிகம் ஆகும்.
நாமக்கல்,
சமீபகாலமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது முக்கிய இடம் பிடித்து வருகிறது. இதனால் புத்தாண்டை முன்னிட்டு மது விற்பனை அதிகரிப்பது வழக்கமாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 190 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கடந்த 31-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த 2 நாட்களிலும் ரூ.7 கோடியே 6 லட்சத்துக்கு மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனையாகி உள்ளது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-
சாதாரண நாட்களில் சுமார் ரூ.3 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகும். ஆனால் கடந்த 31-ந் தேதி ரூ.4 கோடியே 9 லட்சத்திற்கும், நேற்று முன்தினம் ரூ.2 கோடியே 97 லட்சத்திற்கும் மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு புத்தாண்டையொட்டி ரூ.6 கோடியே 74 லட்சத்துக்கு மதுபான வகைகள் விற்பனையாகின. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூடுதலாக ரூ.32 லட்சம் மதிப்பில் மது விற்பனை நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story