மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
விருதுநகர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 59 ஆயிரத்து 402 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,344 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது.
16,011 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3,954 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,350 ஆக உயர்ந்துள்ளது.
104 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப்படவில்லை.
நேற்று 1,574 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3,900-க்கும் மேற்பட்டோருக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.
மருத்துவ பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஓரளவு மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து இருந்தாலும் முடிவு தெரிவதில் தாமதம் ஏற்படுவதால் நோய் பரவ வாய்ப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது இடங்களில் விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story