திருவெண்ணெய்நல்லூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
திருவெண்ணெய்நல்லூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கம் மற்றும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபாகரன், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரும் திருவெண்ணைநல்லூர் தெற்கு அ.தி.மு.க. செயலாளருமான ராமலிங்கம், திருவெண்ணெய்நல்லூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஒன்றிய கல்விகுழும தலைவருமான ராம.ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காண்டீபன் வரவேற்றார்.
45 ஆயிரத்து 173 பேருக்கு...
விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, திருவெண்ெணய்நல்லூர், சித்தலிங்கமடம், டி.எடையார், ஏமப்பூர், பாவந்தூர், செம்மார் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் ரேஷன்கடைகளுக்கு உட்பட்ட 45 ஆயிரத்து 173 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 11 கோடியே 29 லட்சத்து 32 ஆயிரத்து 500 மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர்.
மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்
அப்போது, அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில், பொங்கல் திருநாளை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்து 86 ஆயிரத்து 97 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளார்கள். இதற்கான தொகை ரூ.156.30 கோடி ஆகும். இத்திட்டத்தில் முறைகேடு ஏதேனும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக வெளிப்படையாக ரூ.2, 500 ரொக்கத்தினை வழங்க வேண்டும் என்று தனியே ஆணை பிறப்பித்துள்ளார்கள். எனவே மக்கள் இந்த பரிசு தொகுப்புகளை பெற்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றார் அவர்.
இதில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் இந்திரா, மணிமாறன், கூட்டுறவு சங்க சார்பதிவாளர்கள் பிரபாவதி, சாந்தி, முன்னாள் ஒன்றியகுழு தலைவர் மகாலட்சுமி ஏகாம்பரம், ஒன்றிய இணை செயலாளர் சிவகாமி முருகதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்யராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் அறிவு, கூட்டுறவு சங்க துணைத்தலைவர் நாகவள்ளி ஆறுமுகம், கிராம வங்கி தலைவர் செல்வமுருகன், துணைத்தலைவர் சோடா முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் பாலுபாஸ்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் பாபு என்கிற தேவநாதன், பரிமளா காந்தி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் இந்திரா ரகோத்தமன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் பாலச்சந்திர விநாயகம், வீரமணி, நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் அஜீஸ், வார்டு செயலாளர்கள் ஸ்ரீதர், தங்க கலியபெருமாள் முருகன், கருணா, மோகன், குப்புசாமி, பாட்டாளி, ராமலிங்கம் அம்பேத்கர், தென்றல், ராமச்சந்திரன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story