பாவூர்சத்திரத்தில் 563 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்


பாவூர்சத்திரத்தில் 563 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 4 Jan 2021 8:39 AM IST (Updated: 4 Jan 2021 8:39 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் 563 மாணவர்களுக்கு இலவச சைக்கிளை, அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி வரவேற்று பேசினார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. மொத்தம் 563 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 14 மாணவர்களுக்கு எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ்ராஜ், சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், கீழப்பாவூர் யூனியன் கூடுதல் ஆணையாளர் திலகராஜ், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், தலைமை ஆசிரியை ஜான்சிராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் குணசேகரன் நன்றி கூறினார்.

அம்மா மினி கிளினிக்

பாவூர்சத்திரம் அருகே சிவநாடானூரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அம்மா கிளினிக்கை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலுசிவலிங்கம், பாவூர்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்தி, அரசு டாக்டர்கள் ராஜ்குமார், பிரவீன், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ரகுபதி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், கூடுதல் அலுவலர் லெனின், சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, சமுதாய செவிலியர் லீனாள்தேவி, கீழப்பாவூர் யூனியன் கூடுதல் ஆணையாளர் திலகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story