தர்மபுரி மாவட்டத்தில் 20 மையங்களில் குரூப்-1 தேர்வை 5,251 பேர் எழுதினார்கள்


தர்மபுரி மாவட்டத்தில் 20 மையங்களில் குரூப்-1 தேர்வை 5,251 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 4 Jan 2021 9:10 AM IST (Updated: 4 Jan 2021 9:10 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 20 மையங்களில் குரூப்-1 தேர்வை 5,251 பேர் எழுதினார்கள்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்படும் பல்வேறு பணிகளுக்கான குரூப்-1 தேர்வுகள் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் 20 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 8,983 பேர் தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 5,251 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 3,732 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு எழுத வந்த தேர்வர்கள் தேர்வு மையத்தில் கைபேசி, கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் கைெகடிகாரம் போன்ற தகவல் பரிமாற்ற உபகரணங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வசதியாக அனைத்து மையங்களுக்கும் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.

கலெக்டர் ஆய்வு

தேர்வு எழுத வந்த தேர்வர்கள் அனைவரும் முழு சோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வு எழுத வந்த அனைவரும் முககவசம் அணிந்து வந்தனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அதியமான்கோட்டை அரசு பள்ளி மற்றும் நல்லம்பள்ளி விஜய் வித்யாலயா கல்லூரி வளாகத்தில் நடந்த தேர்வுகளை கலெக்டர் கார்த்திகா திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் தேர்வு மையத்தில் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போதுஉதவி கலெக்டர்கள் பிரதாப், தணிகாசலம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக நேற்று காலை மாவட்ட கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

Next Story