பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது: 3 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.79¾ கோடி வினியோகம்
கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. இதில் 3 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.79¾ கோடி வழங்கப்பட உள்ளது எனஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர்,
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து கடந்த மாதம் 21-ந்தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கரூர் வெங்கமேடு, மண்மங்கலம், வ.உ.சி.தெரு, காந்திகிராமம் (தெற்கு) ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார்.
ரூ.79.78 கோடி ஒதுக்கீடு
இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வீதம் பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார். கொரோனா காலத்தில் தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பினரும் புத்துணர்வோடு மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் முழுகரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். அதன்படி, கரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 9 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.79 கோடியே 78 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். .இந்தநிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் கீதா எம்.எல்.ஏ., திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குளித்தலை
குளித்தலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ். கண்ணதாசன் தலைமை தாங்கி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். இதில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மருதூர் திருநாவுக்கரசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் தர்மேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே உள்ள போதுராவுதன்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமை தாங்கி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். இதில், போதுராவுதன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அன்பரசு, பஞ்சப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நொய்யல்
நொய்யல் அருகே உள்ள திருக்காடுத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில், நொய்யல், கோம்புப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடு துறை ஆகிய 4 ரேஷன்கடைகளுக்கு உட்பட்ட 1,690 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன் வழங்கினார். இதற்கு கூட்டுறவு வங்கி தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார்.
இதேபோல், வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில், வேட்டமங்கலம், கவுண்டன்புதூர், குறுக்குச்சாலை, குந்தாணிபாளையம், ஓலப்பாளையம் ஆகிய 5 ரேஷன்கடைகளுக்கு உட்பட்ட 2,836 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை, கூட்டுறவு வங்கி தலைவர் முனுசாமி வழங்கினார். துணைத்தலைவர் செல்லப்பன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இயக்குனர்கள், வங்கி பணியாளர்கள், விற்பனையாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தரகம்பட்டி
கடவூர் ஒன்றியம், தரகம்பட்டி, பாலவிடுதி, கடவூர், இடையபட்டி ஆகிய ஊர்களில், கடவூர் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story