பொங்கல் பண்டிகையையொட்டி ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
x
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தினத்தந்தி 5 Jan 2021 10:34 AM IST (Updated: 5 Jan 2021 10:34 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

மாணவர்களுக்கு டேப்...

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டம் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை `மக்களின் முதல்வர்` என்று பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். இன்னும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

முதல்-அமைச்சருடைய கருத்தை கேட்டு பள்ளிகள் திறந்தவுடன், அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும். பள்ளிகளில் நடத்தப்படும் செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெறும். அதற்கான அட்டவணை கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.

ஆன்லைன் வகுப்புகள்
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பணிக்காலம் முடிவுற்றவர்களுக்கு பணப்பலன்கள் அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

அரசு பள்ளிகளிலும் தேவையான கழிப்பறைகள் அமைக்கப்படும். கல்விக்கடன் ரத்து பற்றி தேர்தலின் போதுதான் தெரியும்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story