வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து தாசில்தார் ஆய்வு
போளூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களை தாசில்தார் சாப்ஜான் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
போளூர்,
போளூர் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவைகளின் கட்டிட உறுதித்தன்மை, அடிப்படை வசதிகள் எப்படி உள்ளன? என்று நேரடி ஆய்வை 2-ந்தேதி தொடங்கி தினமும் பார்வையிட்டு வருகிறார்.
அதேபோல் சணிக்கவாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை தாசில்தார் சாப்ஜான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போதிய வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது தேர்தல் பிரிவு துணைத் தாசில்தார் மஞ்சுளா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் சென்று வருகின்றனர்.
Related Tags :
Next Story