ஆரணியில் ரூ.2,500 ரொக்கத்துடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்


ஆரணியில் ரூ.2,500 ரொக்கத்துடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jan 2021 5:38 PM IST (Updated: 5 Jan 2021 5:38 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் ரேஷன்அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கி தொடங்கி வைத்தார்.

ஆரணி,

ஆரணி அண்ணா சிலை அருகே உள்ள வைகை கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. கூட்டுறவு பதிவாளர் இல.பாலசுப்பிரமணியம், கூட்டுறவு பதிவாளர்கள் ரவிக்குமார், அந்தோணிசாமி ஜான்பீட்டர், க.ராஜ்குமார், இ.சரவணன், எஸ்.ஆரோக்கியராஜ், கமலக்கண்ணன், எஸ்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர். .ஜி.சேகர் வரவேற்றார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு அரிசி வாங்கும் குடும்ப அட்டை பயனாளிகளுக்கு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கத்துடன் முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ,20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ,ஆகிய தொகுப்பு பையுடன் பரிசுப் பொருட்களையும் னார் .

அப்போது அவர் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 7 லட்சத்து 49 ஆயிரத்து 259 ஆகும். மேலும் இலங்கை அகதிகள் முகாமில் வாழும் 1092 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரத்து 351 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கத்துடன் வரும் 12ஆம் தேதி வரை வழங்கப்படும் விடுபட்டவர்களுக்கு 13-ந் தேதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து சேவூர் கிராமத்தில் உள்ள ரேஷன்கடை, வடுகசாத்து, தச்சூர், கொருக்காத்தூர், நாவல்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்.

மேலும் சேவூர் - ரகுநாதபுரம் பெரிய ஏரியில் மீன்வளத் துறை சார்பாக 15 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய ஏரியில் மீன் வளர்ப்புக்கேற்ற சுமார் 75 ஆயிரம் மீன் குஞ்சுகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் விட்டார். நிகழ்ச்சிகளில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், ஆவின் துணை தலைவர், பாரி பி .பாபு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் வக்கீல் கே. சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எஸ்.எஸ்.ஜோதிலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சேவூர் ஜெ.சம்பத், மாமண்டூர் பி..சுப்பிரமணி, மீனவர் சங்க தலைவர் ஆனந்தன், மீன்வளத்துறை மாவட்ட இயக்குனர் கங்காதரன், கூட்டுறவு ஒன்றியத்தின் இணையத்தின் இயக்குனர் கலைவாணி, ஒன்றிய செயலாளர் அரங்கநாதன், துணைச் செயலாளர்கள் கே. வேலு உள்பட அரசு அலுவலர்கள் , கூட்டுறவாளர்கள்,அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு ஒன்றியம் மன்சூராபாத் கிராமத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் ஆத்தி துரை கூட்டுறவு கூட்டுறவு சங்க தலைவருமான ராகவன் தலைமை தாங்கி ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி வாழ்த்திப் பேசினார். இதில் திருவண்ணாமலை மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் அல்லி பாபு, கரைப்பூண்டி தலைவர் இந்திரா பாலமுருகன், மட்டைப் பிறையூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மன், ரேஷன் கடை விற்பனையாளர் கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

வேட்டவலத்தில் நடந்த நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கே.செல்வமணி பொங்கதல் தொகுப்பு வழங்கி தொடக்கி வைத்தார். இதில் வங்கி செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story