கிருஷ்ணகிரியில் விபத்து: மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பெண் சாவு - சிறுமி படுகாயம்


கிருஷ்ணகிரியில் விபத்து: மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி பெண் சாவு - சிறுமி படுகாயம்
x
தினத்தந்தி 5 Jan 2021 7:23 PM IST (Updated: 5 Jan 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். சிறுமி படுகாயம் அடைந்தாள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 37). கார் டிரைவர். இவர் தனது தாயார் ராணி (57), மகள் ஜெபிஸ்ரீ (4) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மாரிமுத்து லேசான காயம் அடைந்தார். அவருடைய தாயார் ராணி, மகள் ஜெபிஸ்ரீ ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராணி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிறுமி ஜெபிஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story