மதுரையில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி


மதுரையில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 5 Jan 2021 9:10 PM IST (Updated: 5 Jan 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியானார்.

மதுரை,

மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் அசோக்நேரு (வயது 54). இவர் மத்திய நுண்ணறிவு பிரிவில் (ஐ.பி.) இன்ஸ்பெக்டராக ராமநாதபுரத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு மாறுதலாகி வந்தார். அவருக்கு கடந்த 31-ந் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டது. கே.கே.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலை மோசமானது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோக்நேரு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அவருடன் பணியாற்றி வந்த அதிகாரிகள், போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Next Story