குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை, அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
மானூர்,
மானூர் அருகே ரஸ்தாவில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், நெல்லை பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் உக்கிரன்கோட்டை தொடக்க வேளாண்மை வங்கி தலைவர் வெங்கடாசலம், உக்கிரன்கோட்டை தெற்குப்பட்டி மற்றும் களக்குடி கிராமங்களில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் எபனேசர், செயலாளர் திரௌபதி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி
சேரன்மாதேவி கூட்டுறவு பண்டகசாலையின் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் நேற்று பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் டேவிட் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். சேரன்மாதேவி (கிழக்கு) தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
இதில் பண்டகசாலை இயக்குனர்கள் மேகநாதன், ராமநாராயணன், ராமன், சேரன்மாதேவி நகர தி.மு.க. செயலாளர் மனிஷா செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி பன்னீர் செல்வம், நகர துணை செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர்ராமன், தொ.மு.ச. கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story