பண்ருட்டியில், நாளை அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்கிறார்


பண்ருட்டியில், நாளை அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 6 Jan 2021 11:48 AM IST (Updated: 6 Jan 2021 11:48 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாளை பண்ருட்டியில் நடக்கிறது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேச உள்ளார்.

பண்ருட்டி, 

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நாளை காலை (வியாழக்கிழமை) 10 மணியளவில் பண்ருட்டி-சென்னை சாலையில் உள்ள சினேகா மஹாலில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாநில மகளிரணி துணைச் செயலாளரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சத்யா பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார்.

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார்.

அமைச்சர் பங்கேற்பு

சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு களப்பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார்.

கூட்டத்தில் என்.முருகுமாறன் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Next Story