கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா


கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
x
தினத்தந்தி 6 Jan 2021 11:55 AM IST (Updated: 6 Jan 2021 11:55 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கல்பனாஹரிகரன் தலைமை தாங்கினார். செயலாளர் மாணிக்கம், துணை தலைவர் ராஜேந்திரன், அ.தி.மு.க. இளைஞரணி துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்புடன் ரூ.2,500, வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் வாணியந்தல் கிராமத்தில் அரியபெருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை கடன் சங்க தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற விழாவிலும், மோகூர் கிராமத்தில் கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவிலும் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் அ.தி.மு.க. கிளை செயலாளர்கள் ராமு, கோவிந்தராஜ், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கோவிந்தன், வாணியந்தல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் அய்யம்பெருமாள், கதிர்வேல், ஒன்றிய அ.தி.மு.க. பேரவை செயலாளர் பாலசுந்தரம், கூட்டுறவு சங்க துணை தலைவர் அண்ணாதுரை, ஊராட்சி செயலாளர் வேலாயுதம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை கடன் சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சாமிதுரை, ராஜேந்திரன், முடியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குமாரசாமி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தியாகதுருகம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கினார். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் குள்ளம்மாள் சிங்காரவேலு, இயக்குனர்கள் வெங்கடேசன், ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சங்க தலைவர் திருமால் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பவுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேகர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும், மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான அரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கி பேசினார். இதில் தொன்போஸ்கோ, தமிழ்ச்செல்வன், அர்ச்சுனன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ஆகியவற்றை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் வக்கீல் தாமரைச்செல்வன், நிர்வாகிகள் அப்துல்லா, பாலமுருகன், ராமமூர்த்தி, பூபதி, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story