முன் விரோதத்தில் பக்கத்து வீட்டு பெண் வெட்டிக் கொலை - கட்டிட தொழிலாளிக்கு வலைவீச்சு
மதுரை அருகே முன் விரோத தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணை வெட்டிக் கொன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதூர்,
மதுரை ஊமச்சிக்குளம் அருகே செட்டிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலத்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மனைவி பொன்னுத்தாய் (வயது 55).
இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துச்செல்வம் (40). மேலூர் கொட்டக்குடியைச் சேர்ந்த இவர் இப்பகுதியில் வாடகை வீ்ட்டில் வசித்து கட்டிட வேலைகளுக்கு சென்று வந்தார்.
கழிவுநீர் செல்வது மற்றும் பொது இடப்பிரச்சினை தொடர்பாக பொன்னுத்தாய்க்கும், முத்துச்செல்வத்துக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த முத்துச்செல்வம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து பொன்னுத்தாயை வெட்டினார். அப்போது அதனை தடுக்க வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பஞ்சு என்பவரது கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டுப்பட்ட பொன்னுத்தாய் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து முத்துச்செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஒத்தக்கடை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இக்கொலை சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முத்துச்செல்வத்தை வலைவீசி தேடி வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story