மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பெரிய ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்


மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பெரிய ஏரி
x
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பெரிய ஏரி
தினத்தந்தி 7 Jan 2021 6:08 AM IST (Updated: 7 Jan 2021 6:08 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் உள்ள பெரிய ஏரியில் ஏற்கனவே பெய்த மழையால் ஓரளவு நீர் நிரம்பி காணப்பட்டது.

நேற்று பெய்த மழையால் ஏரி முழு கொள்ளளவை எட்டியதுடன் உபரி நீர் கலங்கல் வழியாக நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வெளியேறுவது போன்று ரம்மியமான தோற்றத்தில் அதிவேகத்தில் வெளியேறி வருகிறது.

இந்த ஏரி நிரம்பியதால் அங்குள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு 2 போக நெற்பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த பகுதி விவசாயிகள் வேர்க்கடலை, நெற்பயி்ர், தர்பூசணிி போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் அங்குள்ள வயல் வெளிகளில் பாய்கிறது.

Next Story