திருமக்கோட்டையில் தி.மு.க. பேனர்கள் கிழிப்பு கட்சியினர் திரண்டதால் பரபரப்பு
திருமக்கோட்டையில் தி.மு.க. பேனர்களை அரசியல் கட்சியினர் கிழித்தனர். இதை கண்டித்து தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டையில் நேற்று திருமக்கோட்டை மேலநத்தம் ஊராட்சி சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்டூர் ஒன்றிய தெற்கு செயலாளர் வி.எஸ்.ஆர். தேவதாஸ் தலைமையில் முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன், டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் கலைவாணி மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்காக அந்த இடத்தில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பேனர்களை சிலர் கிழித்து சேதப்படுத்தினர்.
நடவடிக்கை
இது குறித்த தகவல் அறிந்த கோட்டூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தேவதாஸ், மாவட்ட துணை செயலாளர் கலைவாணிமோகன், ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த தி.மு.க.வினர் திரளாக கூடினர். இதைத்தொடர்ந்து திருமக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story