ரூ.224 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ள பகுதிகளை நபார்டு வங்கியின் கட்டமைப்பு மேம்பாட்டு குழு ஆய்வு
ரூ.224 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ள பகுதிகளை நபார்டு வங்கியின் கட்டமைப்பு மேம்பாட்டு குழு ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை,
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளை விரிவாக்கம், புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.3 ஆயிரத்து 124 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் 33 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி முதற்கட்டமாக ரூ.224 கோடி மதிப்பீட்டில் 2 தொகுப்புகளுக்கான பணி மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி காவிரி வடிநில பகுதியில் பாயும் காவிரி, வீரசோழனாறு, விக்கிரமன் ஆறு, மகிமலையாறு, பழவாறு, புதுமண்ணியாறு, அய்யாவையனாறு ஆகிய ஆறுகளை விரிவாக்கம், புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.
ஆய்வு
இதனை அடுத்து பணிகள் மேற்கொள்ளபட உள்ள மயிலாடுதுறை மாப்படுகை காவிரி ஆற்று பகுதியை நபார்டு வங்கியின் கட்டமைப்பு மேம்பாட்டு பிரிவு உதவி பொது மேலாளர் நாராயணன், உதவி மேலாளர் மஞ்சுநாத்ரெட்டி, பொறியாளர் சவுந்தரராஜன் ஆகியோர் அடங்கிய வல்லுனர் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் மரியசூசை, சீனிவாசன் மற்றும் உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story