தேங்காப்பட்டணம் துறைமுகம் சீரமைப்பு பணிக்கான அரசாணை வெளியீடு மீனவ பிரதிநிதிகளிடம், தளவாய்சுந்தரம் வழங்கினார்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை சீரமைக்க ரூ.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாைண வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மீனவ பிரதிநிதிகளிடம் கூறினார்.
கொல்லங்கோடு,
குமரி மாவட்ட மீனவ பிர திநிதிகள் மற்றும் பங்குதந்தைகளுடனான கலந்துரையாடல் கூட்டம் தூத்தூர் மறைவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு மீனவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக குமரி மாவட்ட மீனவ மக்களின் குறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
ரூ.77 கோடி ஒதுக்கீடு
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தை தூர்வாரி நீளத்தை அதிகரிக்க வேண்டும் என 8 மீனவகிராம மக்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டம் வந்தபோது கோரிக்கை வைத்தனர். மேலும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தை சீரமைத்து நீளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், நீளத்தை அதிகரித்து முகத்துவாரத்தை சீரமைத்தால் தான் நாட்டுப்படகுகளும், விசைப்படகுகளும் கரையில் இருந்து கடலுக்கு எளிதாக சென்று வர முடியும் என்று முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.
இதைத் தொடர்ந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் பிரதான முகத்துவாரத்தை 200 மீட்டர் நீளத்திற்கு நீட்டிப்பதற்கும், மீன்பிடி துறைமுகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் 36 மீட்டர் நீளமுள்ள முன்பகுதியை புதுப்பிக்கவும் ரூ.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
எனவே, மீனவ மக்களின் நலனுக்காக நிதி ஒதுக்கீடு செய்து ஆணைப்பிறப்பித்த முதல்-அமைச்சருக்கு மீனவ மக்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். அத்துடன் துறைமுகம் மறுசீரமைப்பு பணி செய்ய ரூ.77 கோடி நிதி ஒதுக்கப்பட்ட அரசாணை பிரதியை தளவாய் சுந்தரம் மீனவ பிரதிநிதிகளுடன் ஒப்படைத்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், பங்குத்தந்தைகள் டோனிஹேம்லட், ரிச்சர்டு, ஆன்செல், அசிசி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ் மற்றும் யூஜின், ஜஸ்டின் ஆண்டனி, ஜோஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story