சோளிங்கர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு


சோளிங்கர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 7 Jan 2021 4:41 PM IST (Updated: 7 Jan 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

சோளிங்கர், 

சோளிங்கரை அடுத்த வடகடப்பந்தங்கல் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

நேற்று காலை சென்று பார்த்த போது கடையின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கொண்டபாளையம் போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது குடிப்பதற்காக ஒரு சில மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story