திருப்பூரில் சாலைமறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 175 பேர் கைது
திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 175 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்றது. போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச்செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு திருத்தம் செய்ததை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும், கொரோனா நிவாரண நிதியாக ஏழை குடும்பத்தினருக்கு மாதம் ரூ.7,500 வழங்க கோரியும், நலவாரியத்தை முறைப்படுத்த கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் வடக்கு போலீசார் அவர்களைத் தடுத்த போது இரு தரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளையும் தூக்கி வீச முயன்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் 90 பெண்கள் உட்பட 175 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story