மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3½ கோடியில் அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு + "||" + Pudukkottai Government Medical College Hospital has a Rs

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3½ கோடியில் அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3½ கோடியில் அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடி அமைக்கப்பட்ட அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடி மதி்ப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய இருதய சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ளன. தற்போது ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கேத்லாப் சிகிச்சைப் பிரிவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிகிச்சைகள்

இதன்மூலம், மாரடைப்பு, ரத்தக்குழாயில் அடைப்பை எளிதாக கண்டறிய முடியும். மேலும், ரத்தக்குழாய் அடைப்புக்கு பலூன் சிகிச்சை, இருதய வால்வு சுருக்க நோய்களுக்கு பலூன் சிகிச்சை, இருதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளை அடைக்கும் சிகிச்சை, செயற்கை இருதய துடிப்பு கருவி பொருத்துதல், இருதயத்தில் உள்ள ரத்தக்குழாயில் அழுத்தங்களை கண்டறிதல், ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

ஏழை, எளிய மக்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் இச்சிகிச்சைகள் அளிக்கப்படும். இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுவதால் பிற மாவட்டங்களுக்கு செல்ல அவசியம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் தொண்டைமான், மாவட்ட வேளாண் விற்பனை குழுத்தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி வரவேற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கிய பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்
கோல்ப் விளையாட்டு போட்டியில் பிரபல வீரராக அறியப்படும் டைகர் உட்ஸ் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
2. அரசு விழாவில் வழங்கப்பட்ட உணவை காலதாமதமாக சாப்பிட்டதால் 64 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு
அரசு விழாவில் வழங்கப்பட்ட உணவை காலதாமதமாக சாப்பிட்டதால் 64 பேருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு இலுப்பூர், விராலிமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
3. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
4. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
5. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவு
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவினை முதல்வர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார்