2-ம் கட்ட ரெயில் பாதையில் மைசூரு ரோடு-கனகபுரா ரோடு இடையே மெட்ரோ ரெயில் சேவை; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா 14-ந்தேதி தொடங்கிவைக்கிறார்


கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
x
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
தினத்தந்தி 8 Jan 2021 7:16 AM IST (Updated: 8 Jan 2021 7:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 2-ம் கட்ட ரெயில் பாதையில் மைசூரு ரோடு- கனகபுரா ரோடு இடையே வருகிற 14-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது. இதனை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கிவைக்கிறார்.

2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பாதை
பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பையப்பனஹள்ளியில் இருந்து மைசூரு ரோடு வரை முதலாம் கட்ட மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. மறு மார்க்கமாக எலச்சேனஹள்ளில் இருந்து நாகசந்திரா வரை மெட்ரோ ரெயில் இயங்கி வருகிறது. இதை தொடர்ந்து மைசூரு ரோட்டில் இருந்து கனகபுரா ரோடு வரை 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய ரெயில்வே சேவை பிரிவு அதிகாரிகள் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் சேவை மார்க்கத்தில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தினர். மேலும் மைசூரு ரோடு இருந்து கனகபுரா ரோடு வரையில் உள்ள 5 ெரயில் நிலையங்களில் தூய்மை பராமரிப்பது மற்றும் காவலர்களை ஜனவரி 10-ந் தேதிக்குள் நியமிக்கும்படி நம்ம மெட்ரோ நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. 

அதன்படி தற்போது 5 ரெயில் நிலையங்களில் தூய்மை பணியில் ஈடுபடுவோர் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எடியூரப்பா தொடங்கிவைக்கிறார்
மைசூரு ரோட்டில் இருந்து கனகபுரா ரோடு வரையிலான 2-ம் கட்ட மெட்ரோ ரெயில்வே பாதை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், இந்த மார்க்கத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மத்திய ெரயில்வே பாதுகாப்பு பிரிவு அனுமதி அளித்துள்ளது. அதன் பேரில் வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று முதல்-மந்திரி எடியூரப்பா 2-ம் கட்ட ரெயில் பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கிடைக்கிறார். அதைத்தொடர்ந்து அந்த வழித்தடத்தில் 15-ந் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி அளித்தது. ஆனால், தற்போது இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் சேவை என்பது 5 ஆண்டுகளில் 6.29 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் முடிக்கப்பட்டுள்ளது. மைசூரு ரோட்டில் இருந்து கனகபுரா ரோடு வரை அஞ்சனாபுரா ரோடு கிராஸ், கிருஷ்ண லீலா பார்க், வஞ்ரஹள்ளி, தலகட்டபுரா, அஞ்சனாபுரா டவுன்ஷிப் ஆகிய ெரயில் நிலையங்கள் உள்ளன.

மைசூரு ரோடு-கெங்கேரி
மைசூரு ரோட்டில் இருந்து கெங்கேரி வரையிலான 6.46 கிலோ மீட்டர் தூரம் வரை வருகிற பிப்ரவரிக்குள் மெட்ரோ விரிவாக்கப் பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், நில கையகப்படுத்துதலால் விரிவாக்கப்பணியில் தொய்வு நிலை ஏற்பட்டது. மேலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை மாற்றம் செய்ததும் விரிவாக்கப்பணியின் 
தொய்வுக்கு மேலும் ஒரு காரணமாக அமைந்தது.

Next Story