பண்ருட்டியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்றுங்கள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவுரை


பண்ருட்டியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்றுங்கள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவுரை
x
தினத்தந்தி 8 Jan 2021 6:26 AM GMT (Updated: 8 Jan 2021 6:26 AM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகள் ஒற்றுமையோடு களப்பணியாற்ற வேண்டும் என பண்ருட்டியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுரை வழங்கி பேசினார்.

பண்ருட்டி,

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பண்ருட்டி-சென்னை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில மகளிரணி துணை செயலாளரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான சத்யா பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்டக்குழு தலைவர் திருமாறன், மாவட்ட துணை செயலாளர் பி.தேன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் பாபு புஷ்பராஜ் என்.டி.கந்தன், நகர செயலாளர்கள் பண்ருட்டி தாடி முருகன், நெல்லிக்குப்பம் சவுந்தர், பேரூர் கழக செயலாளர்கள் தொரப்பாடி கனகராஜ், மேல்பட்டாம்பாக்கம் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளரும், அண்ணாகிராமம் ஒன்றியக்குழு தலைவருமான வி.ஜானகிராமன் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், மண்டல பொறுப்பாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு களப்பணியாற்றுவது என்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்றுங்கள்

தேர்தல் எனக்கும் உங்களுக்கும் புதிதல்ல அ.தி.மு.க.வை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு தொடங்கிய பின்பு 10 பொது தேர்தல்களை சந்தித்துள்ளோம். அதில் நாம் 7 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். 3 தான் தி.மு.க. வெற்றி பெற்றது. நாம் ஒற்றுமையாக இல்லாததால் தான் 3 தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையோடும், முழு சக்தியோடும் களப்பணியாற்றினால் தி.மு.க.வை வீழ்த்தி வெற்றி பெறலாம். அப்போது தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை அமைக்க முடியும். வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் தி.மு.க.வின் கதை முடிந்து விடும். ஆகவே நமக்குள் இருக்கும் எந்த பிரச்சினையையும் 6 மாத காலத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு, ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுங்கள். நான் இந்த தொகுதிக்கு மட்டும் சொல்லவில்லை எல்லா தொகுதிக்கும் சேர்த்து தான் சொல்கிறேன். தொண்டர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தேர்தல்பணியாற்றிட காத்திருக்கின்றனர். அவர்களை வழிநடத்த நிர்வாகிகள் தான் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

முன்னதாக எம்.எல்.ஏ.க்கள் கே.ஏ.பாண்டியன், சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன், பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் நகரசபை தலைவர் ம.ப.பன்னீர்செல்வம், முருகுமணி, மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கோ.பாலசுந்தரம், பாசறை செயலாளர் டேங்க் சண்முகம், விவசாய பிரிவு செயலாளர் குணசேகரன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சந்திரசேகர், மீனவர் அணி செயலாளர் வீராசாமி, இலக்கிய அணி செயலாளர் ஜவகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மருத்துவரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், ஓட்டுனர் அணி செயலாளர் தேவநாதன், தொரப்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் வள்ளி கிருஷ்ணமூர்த்தி, நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என். ஆர். பிரகாஷ், நகர பேரவை ஆர்.வெங்கடேசன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் வை. பாண்டியன், ராம்குமார், ஓ.ஜே.கே. கோதண்டம், ஆர்.ஜெய்சங்கர், மணி, பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக நேர்முக உதவியாளர் வி நடராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் சுந்தரி முருகன், தேன்மொழி தேவநாதன், ஒன்றிய அவைத் தலைவர் பா.ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதி பி.கருணாகரன், தகவல் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு கே.விஜய், இளைஞர் அணி எஸ். மணிமாறன், ஒன்றிய இணைச் செயலாளர் டி.சிவகாமி, இளைஞர் பாசறை எஸ். பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலூர் சரவணன், அஜய் ராஜன், நகர பேரவை செயலாளர் ஓட்டல் செல்வம், நகர துணை செயலாளர் மாணிக்கம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story