நல்லம்பள்ளி அருகே, கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்


நல்லம்பள்ளி அருகே, கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 8 Jan 2021 3:35 PM IST (Updated: 8 Jan 2021 3:35 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிணற்று தண்ணீரில் மூழ்கி மாணவன் இறந்தார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த ஒட்டப்பட்டி சத்யா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மவுனிஷ் (வயது 16). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று காலை அவர் தனது நண்பர்களுடன் சத்யாநகர் மேட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மவுனிஷ் கிணற்று தண்ணீரில் மூழ்கினார்.

வெகுநேரமாகியும் அவர் கிணற்றில் இருந்து வெளியே வராததால், அவருடன் குளிக்க சென்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தர்மபுரி தீயணைப்பு துறையினர் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர தேடுதலுக்கு பின் இறந்த நிலையில் மவுனிஷ் உடலை கிணற்றில் இருந்து தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். மவுனிஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story