தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10 இடங்களில் - கொரோனா தடுப்பூசி ஒத்திகை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, காவேரிப்பட்டணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பர்கூர் அரசு மருத்துவமனை, ஓசூர் சீதாராமன் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் டி.சி.ஆர். தனியார் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் தலா 25 முன்கள பணியாளர்கள் வீதம் மொத்தம் 125 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், ஓசூர் உதவி கலெக்டர் குணசேகரன், தாசில்தார் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி ஒத்திகை முகாமை தொடங்கி வைத்தனர். பர்கூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் சிவகுமார், முதன்மை மருத்துவ அலுவலர் ராஜா, மருத்துவர்கள் எழிலரசி, கார்த்திகேயன், நந்தினி தேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று காவேரிப்பட்டணம் மற்றும் டி.சி.ஆர். தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நடந்தது.
தமிழக அரசின் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நேற்று நடந்்தது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணிக்காக தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையை தமிழக சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த தடுப்பூசி ஒத்திகை ஆய்வின்போது மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் திலகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் இளங்கோவன், கண்காணிப்பு மருத்துவ அலுவலர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சந்திரசேகர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோல் காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாமை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா, தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர். அரூர் அரசு மருத்துவமனை, தர்மபுரியில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 5 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நடைபெற்றது.
Related Tags :
Next Story