வருகிற தேர்தலில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் கோவிந்தராஜூலு பேச்சு
வருகிற தேர்தலில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு பேசினார்.
திருச்சி,
கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு இருந்த காந்திமார்க்கெட்டை திறக்க அறப்போராட்டமும், சட்டப்போராட்டமும் நடத்தி வெற்றி பெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, ஐகோர்ட்டு மூத்த வழக்கறிஞர் வீரா.கதிரவன் ஆகியோருக்கு பாராட்டு விழா பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. காந்திமார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் அப்துல்ஹக்கீம், காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் பலர் வாழ்த்தி பேசினார்கள்.
வியாபாரிகளிடம் ஒற்றுமை
விழாவில் கோவிந்தராஜூலு பேசுகையில், ‘‘காந்திமார்க்கெட்டை மீட்க உதவிய அனைத்து அரசியல் கட்சியினர், கலெக்டர், கமிஷனர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காந்திமார்க்கெட்டை திறக்க நடந்த பல்வேறு போராட்டங்களில் 27 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் என்னோடு சேர்ந்து பயணித்தனர். இந்த ஒற்றுமை வியாபாரிகளிடம் நிலைக்க வேண்டும். பெரிய வியாபாரிகள் முதல் தரைக்கடை வியாபாரிகள் வரை எந்த ஒரு வியாபாரிக்கு பிரச்சினை என்றாலும் விட்டு கொடுக்க மாட்டேன். வருகிற தேர்தலில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு ஓட்டு போட வேண்டும்’’ என்றார்.
இதில் பேரமைப்பு மாநில துணைத்தலைவர்கள் கந்தன், ரெங்கநாதன், கே.எம்.எஸ்.ஹக்கீம், எஸ்.ஆர்.வி.கண்ணன், கே.மனோகரன், வி.பி.ஆறுமுகபெருமாள், ஜி.உமாநாத், மாநில இணைச்செயலாளர்கள் ஜானகிராமன், ராஜாங்கம், காதர்மொய்தீன், எஸ்.ஏ.கமருதீன், பழனி, மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம், மாவட்ட இணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சரவணகுமார், வெளிமாநில அரிசி மொத்த வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கேசவன், மளிகை மண்டி, ஆயில், வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் சங்க பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கத்தினர், வயலூர்சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நலச்சங்கத்தினர், சுமை தூக்கும் கூலித்தொழிலாளர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, வக்கீல் வீரா.கதிரவன் ஆகியோருக்கு வீரவாள் உள்பட பல்வேறு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story